செக்ஸ் மேல் ஈர்ப்பு வர பெண்களுக்கு 237 காரணம் இருக்காம்!
செக்ஸ் மேல் ஈர்ப்பு வர பெண்களுக்கு 237 காரணம் இருக்காம்! Published: Saturday, September 8, 2012, 11:57 [IST] பாலுணர்வும், பாலியல் நினைவுகளும் இல்லாத உயிர்களே இல்லை. ஏதாவது ஒரு காரணத்திற்காக சிலருக்கு உடலுறவு பிடித்திருக்கலாம். இனப்பெருக்கத்திற்காகவும், மன அமைதிக்காவும் மட்டுமின்றி உறவானது பல நிலைகளில் நன்மை தருகிறது என்று ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் பெண்களுக்கு ஏன் அதன் மேல் அத்தனை ஆர்வம் என்று கண்டறிய நடைபெற்ற ஆய்வில் தாம்பத்ய உறவை பெண்களுக்குப் பிடிக்க 237 காரணங்கள் இருக்கிறது என்று தெரியவந்துள்ளது. டேவிட் பஸ் என்ற உளவியல் நிபுணர் இதற்கான காரணத்தை ஆராய்ந்து தனது Why Women Have Sex என்று நூலில் எழுதியுள்ளார். 1006 பெண்களை ஆய்வுக்காக எடுத்துக்கொண்ட நிபுணர் பல்வேறு கேள்விகளை கேட்டுள்ளார். அதில் ஒவ்வொரு பெண்களும் ஒவ்வொருவிதமான பதிலளித்துள்ளனர். செக்ஸ் பற்றி பிடிக்க மொத்தம் 237 காரணங்களை கூறியுள்ளார். செக்ஸ் என்பது த்ரில்லான அனுபவம் என்று கூறியுள்ளனர் சிலர். அதுபோன்ற அனுபவத்திற்காகவே அடிக்கடி உறவில் ஈடுபடுகின்றனராம். தம்பதியரிடையேயான நெருக்கத்தை அதிகரிக்கிறது. இது ச...