கலவிப்பொருத்தம்
கலவிப்பொருத்தம் என்பதென்ன? ஆணும் பெண்ணும் கூடி கலவி செய்வதிலே கவனிக்கத்தக்க வைகளில் ஆழம், நீளம் எனும் இரு சொற்கள் முக்கியமானதாகும். “நீளம்” என்பது ஆணின் லிங்கத்தை (குறியை) குறிப்பதாகும். “ஆழம்” என்பது பெண்ணின் யோனியைக் குறிப்பதாகும். லிங்கம் சிலருக்கு அதிக நீளமாகவும், சிலருக்கு சாதாரண நீளமாகவும், இன்னும் சிலருக்குச் சிறியதாகவும் காண ப்படும். யோனியானது சில பெண்களுக்கு ஆழமாகவும், சில பெண்களுக்கு ஆழமற்றதாகவும் காணப்படும். இந்த ஆழ – நீளத்தை விளக்க காமசூத்திர அறிஞர்கள் முயல், மான், எருது, குதிரை, யானை என்று மறைமுக உவமைகளோடு குறிப்பிடுகிறார்கள். அதற்கு காரணம் முயல், மான், எருது, குதிரை, யானை ஆகியவற்றை அனைவரும் அறிவதோடு, அவற்றின் தோற்றம், அமைப்பு, உறுப்புகள், செயல் யாவும் நன்றாகத் தெரியுமென்பதால் அவற்றை உவமைகளாக குறிப்பிடும்போது ரசனையாகவும், சுலபமாகவும் புரிந்து கொள்ளமுடியும் என்பதே. தன்னுடைய லிங்கம் எத்தகையது என்பதை ஒவ்வொரு ஆணும் தெரிந்து கொள்வதில் எவ்விதக் கஷ்டமுமில்லை. அதேபோல யோனியின் தன்மையை ஒவ்வொரு பெண்ணும் புரிந்து கொள்ள முடியும். மேலும், பெண்ணின் யோனியை ஆணும், ஆணின் குறியை பெண்ணும...